பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா தொற்று..!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அக்ஷய்குமார் தனக்கு இன்று காலை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை சந்தித்து அவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல பாலிவுட் மூத்த நடிகர் கோவிந்தாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.






