--- --:--:-- --

சனிக்கிழமை ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

3

டாஸ்மாக்கின் சனிக்கிழமை ஒரே நாளில் 160 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தொடர் விடுமுறையால் மது வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அடுத்த 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

 

வழக்கமாக 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 160 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon