மாட்டு சாணியை சாப்பிட சொல்லி சிறுவர்களை துன்புறுத்திய நபர்..!
தெலுங்கானாவில் சிறுவர்களை தாக்கிய வலுக்கட்டாயமாக மாட்டு சாணியை சாப்பிட சொல்லி அடித்து துன்புறுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் மேகப்பாபு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்களது வளர்ப்பு நாயை தேடி தோட்டத்திற்கு சென்று உள்ளனர்.
அப்போது தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் அந்த சிறுவர்களை சந்தேகத்தின்பேரில் மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர். தொடர்ந்து மாட்டுச் சாணத்தையும் சாப்பிட சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அப்போது அதனை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காவலாளி செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாயார் அளித்த புகாரின் பேரில் சிறுவர்களை கொடுமைப்படுத்தி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






