--- --:--:-- --

கடம்பூர் ராஜுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

5

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஊத்துபட்டிவிளக்கு அருகே கடந்த 12ஆம் தேதி பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அந்த வழியாக காரில் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டியதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்காததோடு தேர்தலையொட்டி நிபந்தனைகள் எதுவும் விதிக்க தேவை இல்லை எனக் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமைச்சர் கடம்பூர் ராஜூ நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon