--- --:--:-- --

சிதம்பரத்தின் மருமகள் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜகவுக்கு பதிலடி..!

6

பாஜக தேர்தல் விளம்பரத்தில் தனது புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பா சிதம்பரத்தின் மருமகளும் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி சிதம்பரம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான செம்மொழி பாடலுக்கு ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் பரதநாட்டியம் ஆடிய புகைப்படத்தை அவரது அனுமதி இல்லாமல் எடுத்து தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

தனது புகைப்படத்தை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது அபத்தமானது என்று கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon