--- --:--:-- --

திருப்பூரில் எஸ்.பி வேலுமணியின் கார் விபத்துக்குள்ளானது..!

2

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கார் விபத்துக்குள்ளானது.

 

தாராபுரத்தில் இருந்து கொடுவாய் அருகே சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக எஸ் பி வேலுமணி வந்த காரின் மீது மோதியது. இதனால் ஓட்டுனர் திடீரென சடன் பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் எஸ் பி வேலுமணி வந்த காரின் மீது மோதியது.

 

இந்த விபத்தில் எஸ் பி வேலுமணி காயமின்றி தப்பியுள்ளார். இதையடுத்து வேறு காரில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு சென்ற நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon