--- --:--:-- --

தபால் வாக்குப் பதிவு செய்ததை சமூகவலைதளங்களில் வெளியிட்ட ஆசிரியை..!

12

பால் வாக்குப் பதிவு செய்ததை சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகாரில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

சுரண்டை அரசினர் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆரோக்கிய அனுஷ்டால் என்பவர் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அந்த பகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து ஆசிரியை தான் தபால் ஓட்டை பெற்றுக் கொள்ளவில்லை என்றும், தன் பெயரை பெற்று குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்து சமூகவலைதளத்தில் பட்டிருப்பதாக மனு அளித்துள்ளார். தன் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon