குதிரை வண்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பூந்தமல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசுவாமி குதிரை வண்டியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொகுதிக்குட்பட்ட புட்லூர் அரண்வாயில், திருவாரூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் கிருஷ்ணசுவாமி வீதிவீதியாக சென்று உதய சூரியன் சின்னம் சொல்லி வாக்கு சேகரித்தார். இது குறித்து பேசிய கிருஷ்ணசுவாமி பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் வசதி படைத்தவர்களும் கஷ்டம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் உணர்த்தும் வகையில் தான் திமுகவுடன் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.






