--- --:--:-- --

பரப்புரைக்காக நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

1

பிரதமர் மோடி பரப்புரைக்காக நாளை தமிழகம் வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் தேதி நெருங்குவதால் பரப்புரை மேற்கொள்ள தேசிய தலைவர்கள் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.

 

சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டனர். நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து பரப்புரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

இந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி பரப்புரைக்காக தமிழகம் வரை இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அந்தப் பகுதியில் காவல் துறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

பிரதமரை தொடர்ந்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon