கொரொனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழப்பு..!
மும்பையில் கொரொனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேற்கு பகுதியில் உள்ள ட்ரீமஸ் என்ற வணிக வளாகத்தில் சன்ரைஸ் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு கொரொனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது. வளாகத்தில் நேற்று ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென பற்றி மருத்துவமனை முழுவதும் பரவியது. 40க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இன்று காலைவரை ஈடுபட்டன.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நிகழ்வு இடத்திற்கு சென்ற முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.






