கள்ளக்காதலர்களிடம் பேச போன் வாங்கி தருவதாக கூறி பிரச்சாரம்..!
கண்களைக் கூசும் மஞ்சள் பட்டு சட்டையுடன் கூலிங்கிளாஸ் கழுத்தில் மாலையுடன் ஆதரவாளர்கள் ,உதவியாளர்கள் யாரும் இன்றி தன்னந்தனியாக வாகனத்தின் மீது நின்று மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருக்கும் நபர் அந்தியூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் . தையல் கடை வைத்திருக்கும் இவர் தான் சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் என எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்பது தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வருவதாக கூறும் இவர் இதுவரை ஒருவர் கூட தனக்கு வாக்களிக்க வில்லை என்றும் சோற்றுக்கு திண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வாக்களித்தால் குடும்பத்திற்கு 25,000 ரூபாய் வழங்குவேன் என்றும் கூறினார்.
குடும்பத் தலைவிகள் தங்களுடைய அண்ணனிடமோ தம்பியிடமோ கள்ளக்காதலர்களிடமோ பேசுவதற்கு 25,000 ரூபாய் மதிப்பில் ஒப்போ போன் வாங்கி கொடுப்பேன் என கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.






