சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியுடன் கேப்டன் தோனி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய வடிவிலான ஜெர்சியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்ட புதிய செய்தியுடன் தோனி ஜெர்சி அணிந்திருக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் விசில் போடு என கமெண்ட் செய்து அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.







