--- --:--:-- --

45 நிமிடங்களுக்கு முடங்கிய வாட்ஸ் அப் சேவை..! பயனர்கள் அதிர்ச்சி..!

1

லகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு பத்தரை மணி அளவில் முடங்கியது.

 

அதைத்தொடர்ந்து முக்கிய சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவையும் செயல்படவில்லை. உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

 

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின் சுமார் 45 நிமிடங்கள் கழித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கினார். இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் பொறுமையுடன் காத்திருந்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.

Leave a Reply

Right Menu Icon