புதிய தமிழகம் வேட்பாளர்கள் அறிவிப்பு! ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட உள்ள நிலையில் 60 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் 60 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, கிருஷ்ணாசாமி வெளியிட்டுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, முதற் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, அவர் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கிருஷ்ணசாமி, 1996 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் தனித்து நின்று வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.





