முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர்கள் தான் காரணம்..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர்கள் தான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி யுள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மேலும் திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் புகார்கள் உள்ளதாகவும் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.






