--- --:--:-- --

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பாஜக வானதி சந்திப்பு…

Vanathi srini

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேசிய மகளிரனி தலைவி வானதி சீனிவாசன், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தேர்தல் குறித்து ஆலோசித்தார்.

 

வரும் 6ம் தேதி தமிழக சட்டபேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 12ம் தேதி தொடங்கி, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று பாஜக தலைமை, வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது.

 

அதன்படி, தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள கோவை தெற்கு தொகுதியில், பாஜகவின் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தரப்பில் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இங்கு போட்டியிடுகின்றனர்.

 

இந்த நிலையில், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளரான வானதி சீனிவாசன், அதிமுக கூட்டணியை சேர்ந்த வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை இன்று சந்தித்தார். கோவை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, அமைச்சருக்கு வானதி சீனிவாசன் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon