--- --:--:-- --

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின விழா

d1463010-e763-42b9-8b26-50cba7a3d7cf

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் வேலுமாணிக்கம் ஹாக்கி அரங்கில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். யோகா பேராசிரியர் தரணி முருகேசன் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி அளித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் குமார் வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து யோகா பயிற்சி செய்தனர். இளையோர் ஒருங்கிணைப்பாளர் நார்மன் அக்ரம் நன்றி கூறினார்.

Leave a Reply

Right Menu Icon