சென்னை வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா விற்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் முன் காரை விட்டு கீழே இறங்கியுள்ளார்.
சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உள்துறை அமைச்சர் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காலை 8 மணி அளவில் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் கால்களுக்கு புறப்படும் அவர் அங்கு நடைபெறும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3 மணியளவில் விழுப்புரத்துக்கு வருகைதரும் அமைச்சர் மாநில குழு கூட்டத்திலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
பின்னர் 8 மணிக்கு சென்னை வரும்துறை அமைச்சர் அமைச்சர் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அமைச்சரின் இந்த நிகழ்வுகளில் தேர்தல் பரப்புரை திட்டங்கள் தொகுதிப் பங்கீடு வேட்பாளர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அமைச்சரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






