--- --:--:-- --

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய பெண்..!

2

திண்டுக்கல்லில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்துள்ளார். பழனி அடுத்த கீரனூரை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி தேவிக்கும் தாராபுரத்தை சேர்ந்த தனியார் நூற்பாலை ஊழியர் அபிஷேக் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தவறான நடத்தையை கண்டித்த தண்டபாணி மீது ஆத்திரமடைந்த தேவி அபிஷேக் உடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிவிட்டு போலீசாரிடம் கணவரை காணவில்லை என நாடகமாடி உள்ளார்.

 

இதுகுறித்து போலீசார் தேவியிடம் குறுக்கு விசாரணையில் ஈடுபட்ட நிலையில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தேவி மற்றும் அபிஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon