--- --:--:-- --

பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது..!

1

மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்கள் உட்பட 19 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் நாட்டுக்கு சொந்தமான அமசோனியா 1 ஒன்று உட்பட 19 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 10:24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளனர்.

 

முதன்மை செயற்கைக்கோளான அமேசோனியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் நான்காண்டுகள். இதை பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இதுதவிர இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ்சார், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜி‌எச் ரை சோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கூட்டமைப்பில் உருவான யூனிட்டி ஷாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

 

அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன. இறுதிக்கட்ட பணிகளில் 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்டவுன் காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

 

முதலாவதாக ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி- 51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைகோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon