--- --:--:-- --

மனைவியுடனான தகராறில் 5 வயது மகனை  தீ வைத்துக் கொன்ற கொடூர தந்தை..!

4

திருவாரூரில் மனைவியுடனான தகராறில் 5 வயது மகனை  தீ வைத்துக் கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நன்னிலத்தை சேர்ந்த ராம்கி குடிபோதைக்கு அடிமையாகி நேற்று இரவு வீட்டில் தகராறு செய்ததோடு மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.

 

தாயை காப்பாற்ற சென்ற அவர்களது 5 வயது மகன் சாய் சரண் மீது மண்ணெண்ணெய் பட்டுள்ளது. இதனையடுத்து காகிதத்தை பற்ற வைத்த மனைவி மகன் மீது ராம்கி வீசியதாக கூறப்படுகிறது.

 

மனைவி ஓடி ஓடி விட்ட நிலையில் மகன் மீது தீ பிடித்துள்ளது. 80 சதவீத தீக்காயங்களுடன் சாய்சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon