எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்..!
நீதிமன்ற வழிகாட்டுதல்படி எட்டு வழி சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை சேலம் எட்டு வழி சாலையை நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆறு வழிச்சாலை அமைப்போம் என கூறியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் உயிர் போனாலும் இடத்தை தரமாட்டோம் என கோஷங்கள் எழுப்பியுள்ளன.






