--- --:--:-- --

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 84வது நாளாக தொடர்கிறது..!

6

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 84வது நாளாக தொடர்கிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றனர்.

 

சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

 

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறுவடை காலம் என்பதால் விவசாயிகள் தங்களது ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

எனவே அறுவடை தொடங்கியுள்ளதால் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 15 பேர் போராட்டத்தில் இருந்தால் போதும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மற்றவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அறுவடை பணியை மேற்கொள்ள விவசாய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

இதனால் காசியாபாத்தில் விவசாயிகள் பெருமளவில் குறைந்துள்ளனர். அதேசமயம் சொந்த ஊர் செல்ல விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தால் மூன்று மணி நேரத்திற்குள் போராட்டக் களத்திற்கு வந்து விடுவார்கள் என்றும் விவசாயிகள் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon