பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரம்..!
சேலம் மாவட்டத்தில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை கண்டறிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்ற அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சிலரது உதவியுடன் மகளின் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்த தாய் பூங்கொடி பெண் குழந்தை என்பதால் போலி மருத்துவர் உதவியுடன் மகளுக்கு கருக்கலைப்பும் செய்துள்ளார்.
இதுதொடர்பாக சரண்யாவின் தாய் உட்பட 4 பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்தநிலையில் போலி மருத்துவருக்கு உதவியாக இருந்த நரசிம்மரையும் தற்போது தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.






