பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியவர்..!
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற விவசாயி ஏராளமான கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
பால் விற்பனைக்காக அவர் அவ்வப்போது குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
காலதாமதத்தை தவிர்க்க 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெலிகாப்டரை ஜனார்தனன் சொந்தமாக வாழ்ந்துள்ளார். இதற்காக இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஹெலிபேட் கட்டவும் ஏற்பாடு செய்து வருகிறார்.






