தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தின் வறண்ட வானிலையே நிலவும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
18ஆம் தேதியன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 19ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 69. 8 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






