--- --:--:-- --

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்..!

8

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பொருட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

 

மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்றோர், மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று முதல் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon