சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..!
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 14 கிலோ சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை 785 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.







