--- --:--:-- --

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்..!

12

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. டாக்டர் படத்தின் வேலைகளை முடித்து உள்ள சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

 

இதற்கான அறிவிப்பு இரண்டு வாரத்திற்கு முன் வெளியானது. அதைத்தொடர்ந்து நடிகர்கள் தேர்வு நடத்திய படக்குழுவினர் இன்று பூஜையுடன் படப்பிடிப்பை கோவையில் தொடங்கியுள்ளனர்.

 

இந்த படம் கல்லூரி பின்னணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை வகையில் உருவாகியுள்ளது. இதில் சிவாவுடன் எஸ் ஜே சூர்யா, பிரியங்கா மோகன், சிவாஜி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon