--- --:--:-- --

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானம்..!

4

மல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானம் மக்கள் நீதி மையத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

அந்த கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon