--- --:--:-- --

சசிகலா 5 நாட்களுக்கு யாரையும் சந்திக்க மாட்டார்..!

3

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சென்னை வந்துள்ள சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி சில நாட்களுக்கு யாரையும் சந்திக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சசிகலா கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார் சிகிச்சை முடிந்து பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரது உறவினர்கள் அமமுக வின் ஆதரவாளர்கள் என பலர் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.

 

இந்த சூழலில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு வெளியாட்கள் யாரையும் சந்திக்க வேண்டாம் என சசிகலாவை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

 

அதனால் அவர் யாரையும் சந்திக்க மாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும் சசிகலாவுக்கு தனிமைப்படுத்துதல் காலம் நிறைவடைந்து விட்டதாகவும் அவர் இயல்பாகவே வீட்டில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon