கடத்தப்பட்ட அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் சாலையோரம் நிறுத்தும் காட்சி..!
கேரளா மாநிலம் கோட்டா கரையில் கடத்தப்பட்ட அரசு பேருந்தை மர்ம நபர் ஒருவர் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொட்டாரக்கரை போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஒன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வைத்து பேருந்தை கடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.






