--- --:--:-- --

அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் – சசிகலா

11

அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை போன்ற கொள்கைக்கு நான் அடிமை. இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்பதை தெரிவித்து சசிகலா காரில் இருந்தபடியே கூறியுள்ளார்.

 

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் கொரொனா பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போதும் அதிமுக கொடி பொருத்திய காரில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் திரும்பும் போதும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணித்துள்ளார். இந்த நிலையில் காரில் இருந்தாவாறே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon