ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது..!
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் இந்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது.
ஆனால் கொரொனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதனால் சிலர் பாதிக்கப்பட்டனர். ரஜினிகாந்த்திற்க்கும் இரத்தத்தின் மாறுபாடுகளால் சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார். இதனால் மீண்டும் எப்போது துவங்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது எனவும் அதில் ரஜினிகாந்த் பங்கேற்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.






