--- --:--:-- --

உத்தரகாண்டில் மீட்பு பணிகளுக்கு தனது ஊதியத்தை கொடுக்கும் ரிஷப் பந்த்..!

10

உத்தரகாண்டில் மீட்பு பணிகளுக்கு சென்னை கிரிக்கெட் போட்டிக்கான தனது ஊதியத்தை வழங்குவதாக அந்த மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பனிப்பாறைகள் வெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு உத்தரகாண்டில் பலர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது சென்னையில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அவர் மீட்பு பணிகளுக்கு இந்த போட்டிக்கான ஊதியத்தை வழங்குவதாகவும் மேலும் பலர் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon