ரத்த சிவப்பு நிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு..!
இந்தோனேஷியாவில் ரத்த சிவப்பு நிறத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் அதற்கு காரணம் சாயப்பட்டறை என தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவின் தீவில் உள்ள ஒரு கிராமத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சாலையெங்கும் சிவப்பு நிறத்தில் தேங்கி நிற்கும் நீரில் அந்த பகுதி மக்களும் சிறுவர்களும் அச்சமின்றி நடந்து செல்கின்றனர். ஒட்டுமொத்த கிராமத்திலும் சூழ்ந்துள்ள ரத்த சிவப்பு நீர் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து கிராமத்தில் ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதை உள்ளூர் அரசு அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் தண்ணீர் சிவப்பான இதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நகரத்தில் பாரம்பரிய முறைப்படி ஆடைகள் வெளியேற்றும் இடமாக உள்ளது. இந்த பாரம்பரியமிக்க முறையில் சாயம் ஏற்றப்படும் ஆடைகள் அந்த நாட்டில் மிகவும் பிரபலமானவை.
இந்த நிலையில் ஆடைகள் மீது சாயம் ஏற்றப் பயன்படும் சாயம் கலந்ததால் தான் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.






