மன நோயாளிகளை மண் சுமக்க வைத்த சம்பவம்..!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அன்னை மனநோயாளிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகம் ஆனது அங்குள்ள தனியார் கல்லூரியின் பின்புறத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ளது.
ஆளரவம் இல்லாத இடத்தில் அமைந்திருக்கும் இந்த அன்னை மனநோயாளிகள் காப்பகத்தில் இளைஞர்கள், வயதானவர்கள் என 50க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த காப்பக நிர்வாகிகள் அங்கே அனுமதிக்கப்பட்டுள்ள மனநோயாளிகளை சுமக்க வைத்துள்ளனர்.
அதுவும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் மனித நேயமற்ற முறையில் மூன்று லாரிகளை சுமக்க வைத்துள்ளனர். மனதளவிலும், உடலளவிலும் பலவிதமான மனநோயாளிகளை வயது வித்தியாசமின்றி அதிக எடை கொண்ட மண்ணை சுமக்க வைத்த கொடூரம் அங்கே அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநோயாளிகளை வற்புறுத்தியும், துன்புறுத்தியும் சுமக்க வைத்த தனியார் காப்பக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






