விவசாய விலை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்..!
விவசாய விலை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை என்றும் தொடரும் என உறுதியளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய அவர் வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பேசியதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என சரத் பவார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்ததாகவும் ஆனால் தற்போதுஅவர்கள் பின்வாங்கி விட்டனர் என்று தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி தற்போது வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் மன்மோகன் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை இன்று போல் என்றும் தொடரும் என உறுதியளித்த பிரதமர் விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார். ஏழைகளுக்கு குறைந்த விலையில் ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் வழங்குவது தொடரும் என்றும், விவசாய மண்டிகள் நவீனப்படுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்க முயற்சி எடுப்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஒவ்வொரு சிக்கலும் நாடு பெருமை கொள்வதாக தெரிவித்த பிரதமர் அவர்களுக்கு குறைவான மரியாதையை இதுவரை தரப்பட்டுள்ளது என்று அவரை சிலர் தவறாக வழி நடத்துவதாகவும், அதனால் தேசத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று மோடி கூறியுள்ளார்.
முன்னதாக கொரொனா தடுப்பு மருந்து குறித்து பேசிய பிரதமர் உலகுக்கே மருந்தும் வழங்கும் நாடாக இந்தியா உயர்ந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.






