ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு..!
விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் நீக்காதது குறித்து டுவிட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் பரவுகின்றன.
விவசாயிகளை அரசு படுகொலை செய்கிறது என்ற அளவிலான பதிவுகளும் பரவுகின்றன. இந்த பதிவுகளில் வதந்திகள் கலப்பத்தோடு அரசின் மீது அவதூறு விமர்சனங்களும் வைக்கப்படுவதாகவும் எனவே இதைப் பற்றிய 250 பதிவுகளையும், இவை இடப்பட்ட கணக்குகளையும் நீக்க ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படாத நிலையில் தற்போது ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதிவுகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.







