--- --:--:-- --

சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையைப் விலக்கிவிட சென்ற முதியவர் உயிரிழப்பு..!

11

நெல்லையில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையைப் விலக்கிவிட சென்ற முதியவரை எதிர்பாராதவிதமாக தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மார்க்கெட் மாநகரத்தை சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் இர்பான்.

 

இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவில் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும் இடையே இர்பான் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி அது கைகலப்பாக மாறி உள்ளது. இதை பார்த்த இர்பானின் தாத்தா சர்புதீன் மற்றும் சிறுவனின் சித்தப்பா சகோதரி ஆகியோர் விரைந்து சென்று சிறுவர்களின் சண்டையை விலக்கி விட்டுள்ளனர். அப்போது சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக தள்ளியதில் சர்புதீன் கீழே விழுந்து மயங்கி யுள்ளார்.

 

இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அவரை உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறி விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon