--- --:--:-- --

பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண்ணை கோடாரியால் தாக்கிய சி‌சி‌டி‌வி காட்சி..!

8

தெலுங்கானா மாநிலம் கர்லகுண்டாவில் பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் ஒருவர் கோடாரியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

கர்லகுண்டாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராகுல் என்பவன் பாலியல் தொல்லை அளித்த மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகும் ராகுல் நிர்பயா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

 

இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த ராகுல் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவர் மீது கோடாரியால் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டான். இதில் படுகாயம் அடைந்த பெண் ரங்காரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

 

இதனையடுத்து ராகுலை கைது செய்த போலீசார் தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon