ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் 500 ஆடுகளை வெட்டி கறிவிருந்து..!
அரூரில் ஆட்கள் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதி அம்மன் திருவிழாவில் 500 ஆடுகளை பலியிட்டு பூஜை செய்து கறி விருந்து அளிக்கப்பட்டது. அரூரில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வியாபாரம் குடும்பம் செழிக்க வேண்டி ஆண்டு தோறும் தை மாதத்தில் இந்த திருவிழாவை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு திருவிழாவில் முதலில்பச்சை பந்தல் போட்டு சாமியை சிங்காரித்து ஊர்வலம் நடத்தப்பட்டது. முதலில் ஒரு ஆடு வெட்டி பூஜை செய்து மாட்டின் இறைச்சியை தீயில் சுட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
திருவிழாவில் சுமார் 500 ஆடுகள் வெட்டப்பட்டு சுமார் 2000 குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆடு வெட்டி சமைத்து சாப்பிடும் கறி விருந்து நடைபெற்றது.







