--- --:--:-- --

கோவிலில் சிவலிங்கம் கண் திறந்ததாக பரவிய தகவல்..! குவிந்த பக்தர்கள்..!

9

ர்நாடகத்தில் கோவிலில் சிவலிங்கம் கண் திறந்ததாக பரவிய தகவலை அடுத்து அதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பெல்கம் மாவட்டத்தில் கோகும் என்னும் ஊரில் சங்கரலிங்கம் கோவிலில் திங்களன்று சிவலிங்கத்தின் இரு கண்களும் நன்றாக திறந்து இருந்ததாக பூசாரி சாத்தப்பா தெரிவித்தனர்.

 

இதையடுத்து அந்த காட்சியை காணும் ஆர்வத்தில் அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 2004ஆம் ஆண்டு இந்த சிவலிங்கத்தின் கண் திறந்ததாகவும், அப்போது கர்நாடகத்தில் உச்சத்தில் இருந்த டெங்கு காய்ச்சல் முடிவுக்கு வந்ததாகவும் இப்போது மீண்டும் கண் திறந்து இருப்பது இந்தியாவில் கொரொனா முடிவுக்கு வருவதின் அறிகுறி என்றும் பூசாரி தெரிவித்துள்ளார்.

 

இது அறிவியலுக்கும் இயற்கைக்கும் எதிரானது எனவும் வருமானத்தைப் பெருக்கவும், பூசாரிகள் செய்யும் சதி வேலை எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon