--- --:--:-- --

3வது மனைவியின் மகளை கர்ப்பமாக்கிய கொடூரன்..!

5

ரோடு அருகே மூன்று மனைவிகள் இருந்தும் மகளாக பாவிக்க வேண்டிய சிறுமியை கர்ப்பமாக்கிய காமக் கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பெருந்துறையை சேர்ந்த முருகேசனுக்கு 2 மனைவிகள் இருந்தும் சுந்தரியையும் மூன்றாவது மனைவி ஆக்கியுள்ளார்.

 

பழைய பேப்பர் பாட்டில்களை பொறுக்கி வியாபாரம் செய்த இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே சுந்தரியின் 13 வயது மகளை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் முருகேசன். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

 

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுந்தரி முருகேசனின் இரண்டாவது மனைவியுமான கௌசல்யா உடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon