--- --:--:-- --

அமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்..!

10

மெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. டேவிட்ஸ் நகரில் உள்ள பூங்காவில் ஆறடி உயரத்திற்கு உள்ள காந்தியின் வெண்கல சிலையின் கால் பகுதியை சிலர் அடித்து சென்றுள்ளனர்.

 

இதையடுத்து சேதமடைந்த காந்தி சிலை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. காந்தியின் 74வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

சிலையை சேதப்படுத்தியது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி சிலை சேதம் அடைந்தது குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon