மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அலுவலர்கள் குறித்து விவாதிப்பது உடன் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனையும் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தின்போது விவசாயிகள் பிரச்சினையை எழுப்ப கட்சியினர் அனுமதி கேட்பார்கள் என தெரிகிறது. பொதுவாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை கூட்டத்தொடர் தொடங்கிய பின்னரே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இரண்டு நாட்களுக்கு முன்னரே முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.







