--- --:--:-- --

இன்று காலை 1 0.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகிறார்..!

2

4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து இன்று காலை 1 0.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் காலை 9 மணி அளவில் காவல் அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பம் பெறுகின்றனர்.

 

ஆவணங்களில் கையொப்பம் பெறும் நடைமுறைகள் முடிந்ததும் 10:30 மணிக்கு சசிகலா முறைப்படி விடுவிக்கப்படுகிறார். விடுதலைக்குப் பிறகு சசிகலாவை உறவினர்கள் சந்தித்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அல்லது வேறு மருத்துவமனைக்கு மாறலாமா என்பது குறித்து ஆலோசகர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

நேற்றிரவு சசிகலாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரொனா தொற்று அறிகுறிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது. அவரது நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை இயல்பான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் கொடுக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவர் உணவு உட்கொள்வதாலும் எழுந்து அமருவதாகவும் மூன்று கோலுடன் நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon