2 மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்..! வெளிவந்துள்ள புதிய தகவல்..!
சித்தூர் அருகே இரு இளம்பெண்கள் பெற்றோரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு இளம் பெண் கலெக்டர் ஆகும் ஆசையில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தவர் என்ற உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற பகுதியில் வசித்துவந்த புருஷோத்தமன் பத்மஜா தம்பதிக்கு அலேக்கியா, திவ்யா என்ற இரு மகள்கள் இருந்தனர்.
வேதியியலில் பட்டம் பெற்ற புருஷோத்தம் அரசு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றினார். கணித பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தங்கப்பதக்கம் பெற்றவர். ஐஐடி கோசிங் சென்டர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
மெத்தப் படித்திருந்தாலும் இந்த தம்பதிக்கு பூஜைகளில் அதீத நம்பிக்கை உண்டு. மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அது குணமாவதற்காக அவ்வப்போது வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர், இதற்கிடையே கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் இரு மகள்களையும் நரபலி கொடுத்தால் பத்மஜாவின் வலிப்பு நோய் குணமாகும் என்று கூறியதாக தெரிகிறது.
எனவே பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்ட தம்பதியர் தங்களுக்கு இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும் தங்கள் பூஜைக்காக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்தெழுந்து வந்துவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களின் இரு மகள்களையும் தாய் பத்மஜா அடித்துக் கொண்டுள்ளார்.
அதற்கு புருஷோத்தம் உடந்தையாக இருந்துள்ளார். மகள்களை கொன்ற பிறகு தன் நண்பரிடம் மகள்களை மனைவியே அடித்துக் கொன்று விட்டதாக கூறியுள்ளார். கதறியபடி வீட்டிற்கு சென்றபோது அவரை வீட்டுக்குள் மறுத்துள்ளனர். தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்களின் உடல்களை மீட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் உடல் பூஜை அறையில் கிடந்தது. மற்றொரு பெண்ணின் உடல் இன்னொரு அறையில் கிடந்துள்ளது. இரு உடல்களையும் சிவப்பு வண்ணத்தில் கொண்டு போர்த்தி வைத்துள்ளனர். தற்போது புருஷோத்தமன் ஆகியோர் இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.வீட்டிலிருந்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
வீட்டில் இருந்து ஏராளமான கடவுள் சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பூஜை நடக்க பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் வகையில் பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார் ஒரு மகள் .
ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்த சாய் திவ்யா பெற்றோர் உடனே தங்கியிருந்துள்ளார். ஏற்கனவே ஒருமுறை வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இறப்பதற்கு இரு நாட்கள் முன்பு தனது பேஸ்புக்கில் சந்தேகப்படும்படி பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளதாக போலீசார் சொல்கிறார்கள்.
அக்கம்பக்கத்தினர் இடத்தில் நடந்த விசாரணையில் இந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவில் உக்கிரமாக இருப்பார்கள் எனவும் வீட்டிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் என்கின்றனர்.







