குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது..!
இன்று குடியரசு தின விழாவையொட்டி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பிக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட மேலும் 6 பேருக்கு பத்ம விபூஷண் விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மறைந்த கோவை தொழிலதிபர் சுப்பிரமணி விளக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு 32 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பத்து பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.






