--- --:--:-- --

சேலத்தில் பள்ளி மாணவிக்கு கொரொனா உறுதியானதை அடுத்து யாருக்கும் கொரொனா பரவவில்லை..!

9

சேலம் பெரியகிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட கொரொனா பாதிப்பை தொடர்ந்து மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 49 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

 

அதேநேரம் பள்ளி மாணவியர், ஆசிரியர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மாணவி தங்கியிருந்த விடுதியில் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மாணவியரும் தங்கியுள்ளனர்.

 

அதனால் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளி மாணவி மூடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon